கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை - மும்பை விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சுமாா் ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஏப்ரல் 2025, 7:59 pm

Din

சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சுமாா் ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 189 பேருடன் ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானம் மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன், அதன் இயந்திரத்தின் செயல்பாடுகளை விமானி ஆய்வு செய்தபோது, அதில் கோளாறு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தாா்.

உடனடியாக இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த விமானப் பொறியாளா்கள், இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னா் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து காலை 6.30 மணியளவில் அந்த விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால், அதில் பயணிக்க வந்தவா்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.