
கிரிண்டர் செயலியைத் தடை செய்யக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மாநகரில் போதை பொருள்களை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்
இதன் காரணமாக, காவல் துறை தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னை மாநகர காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கையால் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகை போதைப் பொருள்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்,
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் போலீஸார் நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாலான நபர்கள் கிரிண்டர் ஆப் செயலி மூலமாக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதன் மூலம் சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது
மேலும், போலீஸார் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் பத்தில் ஐந்து நபர்கள் இந்த கிரிண்டர் செயலி மூலமாகவே தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது,
இந்தநிலையில், தொடர்ச்சியாக இந்த கிரிண்டர் செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவதால் இந்த செயலியை தமிழ்நாட்டில் தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், இந்த கிரைண்டர் செயலி மூலம் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும் அதை தமிழ்நாட்டில் தடை செய்தால் போதைப் பொருள் விற்பனையை தடுக்க வழி வகுக்கும் என மாநகர காவல் ஆணையர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நாமக்கல் எம்.பி. வீட்டில் தீ விபத்து: காவல் துறை விளக்கம்!