கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக...

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :10 ஏப்ரல் 2025, 8:55 am

DIN

உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

”சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு. 

ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும்.

இந்திய நாடாளுமன்றம் என்பது அனைத்து மாநிலங்களின் தொகுப்புணர்வு என்பதை 1962-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் தன்னுடைய முதல் பேச்சிலேயே உணர வைத்தவர் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அவருடைய குரலுக்குப் பிறகுதான், மாநில உரிமைகள் சார்ந்த குரல்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றி, தற்சார்பாகச் செயல்படும் அதிகாரம் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. 

பேரறிஞர் அண்ணாவும் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்.

நியாயமும் வலிமையும் கொண்ட குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நமது திராவிட முன்னேற்றக் கழக மக்களவை -மாநிலங்களவை உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. தோழமைக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நியாயத்தை எடுத்துரைத்தது. 

தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. எனத் தமிழ்நாட்டின் 39 மக்களவை எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள திமுக எம்.பி.க்களும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதையும் தம் வயப்படுத்தி, மாநில நலனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை குரலாக ஒலித்தார்கள். 

25 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற ஜனநாயக அனுபவம் பெற்ற ஆ. ராசா மக்களவையின் மாற்று அவைத்தலைவராக அமர்ந்து அவையை நடத்திய திறனும், அதுபோல மாநிலங்களவையை, திமுகவின் இளைய எம்.பி.யான எம். எம். அப்துல்லா நடத்திய பாங்கும், நாற்பதுக்கு நாற்பது வெற்றி தந்த தமிழ்நாடு-புதுச்சேரி வாக்காளர்களின் தேர்வு மிகச் சரியானதாக அமைந்திருப்பதைக் காட்டியது.

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது. 

எந்தச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டி மாநில உரிமைகளின் குரலைப் பேரறிஞர் அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினாரோ அந்த சட்டமன்றம்தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன். 

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க. தன் போராட்டத்தைத் தொடரும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.