மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறதா? அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு!

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஏப்ரல் 2025, 11:26 am

DIN

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மத்திய உள்துறை அமித் ஷா நேற்று (ஏப். 10) இரவு சென்னை வந்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசுவதற்காக அமித் ஷா சென்னை வந்துள்ளார். கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ள அவர் இன்று காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய நிலையில், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என்று கூறப்படுகிறது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காகவே அமித் ஷா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க அமித் ஷா இதுவரை நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.