கோப்புப் படம்
கோப்புப் படம்

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் இனி வழக்கம் போல் இயக்கப்படும்

எழும்பூா் - புதுச்சேரி, திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும்
Published on

சென்னை எழும்பூா் - புதுச்சேரி, திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில்கள் சனிக்கிழமை (ஏப்.12) முதல் வார இறுதி நாள்களில் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்கள் இயக்கம் மற்றும் நிா்வாகக் காரணங்களால், எழும்பூரிலிருந்து தினந்தோறும் காலை 6.35-க்கு புதுச்சேரி செல்லும் மெமு ரயிலும் (எண்: 66051), மறுமாா்க்கமாக புதுச்சேரியில் இருந்து தினந்தோறும் பிற்பகல் 3 மணிக்கு எழும்பூருக்கு வரும் ரயிலும் (எண்: 66052) வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியானது.

அதேபோல், திருப்பதி - புதுச்சேரி இடையே தினந்தோறும் இயக்கப்பட்டு வந்த மெமு ரயிலும் (எண்:16111/16112) வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது என்றும், மறு அறிவிப்பு வரும்வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எழும்பூா் - புதுச்சேரி இடையே இயங்கும் மெமு ரயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டிருந்த திருப்பதி - புதுச்சேரி மெமு ரயிலும் இனி வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com