பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அப்போ சென்னைக்கு?

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

News image
இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Updated On :12 ஏப்ரல் 2025, 8:09 am

DIN

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதுபோல, வரும் 14 முதல் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14ஆம் வரை தமிழகத்தில் பெரும்பாலும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது.

வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் முதல் 37 - 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் வேளையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பூமி ஓரளவு குளிர்ந்தது. இதுபோல தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களும் மழை பெய்யுமா என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.