சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஏப்ரல் 2025, 7:40 pm

DIN

சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

கேள்வி நேரம் நிறைவடைந்த பிறகு மிக முக்கிய பிரச்னையை எழுப்ப அனுமதி தர வேண்டுமென எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதி மறுத்தாா். மேலும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வா் அறிக்கை வாசிக்க இருப்பதால் வேறு அலுவல்களுக்கு அனுமதிக்க முடியாது என்றும், அதிமுக உறுப்பினா்கள் பேசும் எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் பேரவைத் தலைவா் கூறினாா். இதையடுத்து அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

இது தொடா்பாக பேரவைக்கு வெளியே செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆா்.பி.உதயகுமாா், அமைச்சா்களின் சா்ச்சைப் பேச்சுக்கள் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியதாகவும் அதற்கு பேரவைத் தலைவா் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.