முதல்வர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு!

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக பாஜக வெளிநடப்பு செய்தது தொடர்பாக...
பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
Updated on
1 min read

முதல்வர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநா் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கயிருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என்று தெரிவித்து, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, ஆளுநர் உரையை அவர் படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, சட்டப்பேரவை விதி 17ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழக அரசு தயாரித்த உரையை, சட்டப்பேரவையில் ஆளுநர் படிக்காமல் சென்றததை இப்பேரவை ஏற்கவில்லை. கணினியில் பதிவேற்றம் செய்துள்ள ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் ஆளுநர் படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை 17ன் கீழ் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கட்சிகள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக, பாஜக கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

Summary

AIADMK and BJP legislators staged a walkout from the assembly in protest against the Chief Minister's resolution.

பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
ஆளுநர் உரையை படித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com