கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி

பாமக உள்கட்சி பூசல் குறித்து ஜி.கே. மணி பேசியது...

ஜி.கே. மணி (கோப்புப்படம்) - TNIE

Published On :

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தானே தலைவராக செயல்படவுள்ளதாகவும் தலைவராகவுள்ள அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதையடுத்து, கட்சிப் பொதுக்குழுவால் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தானே தலைவராகத் தொடர்வேன் என்று அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜி.கே. மணி செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

”மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு வருகின்ற மே 11 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

பாமக தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் மாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள்.

கட்சிக்குள் சலசலப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்னைகள் சரியாகிவிட்டது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை. அந்த பிரச்னை மேலும் பெரிதாகாது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.