கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பா? தடுப்பது எப்படி?

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி ஏற்பட்டதாகத் தகவல்

News image

ENS

Updated On :17 ஏப்ரல் 2025, 4:46 pm IST

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, அவருக்கு பதிலளிக்கும்விதமாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, ``தமிழகத்தில் 1,57,908 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் சிறப்பு ஓய்வூதியத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

உலகளவில் பேசப்படும் நோய்ப்பாதிப்புகளில் ஒன்றாக எச்ஐவி பாதிப்பு உள்ளது. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனினும், சர்க்கரை நோய் போன்று, நாள்தோறும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்களைத் தள்ளிப் போடலாம் என்று கூறுகின்றனர். மருந்துகளின் மூலம், ரத்தத்தில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ இல்லாமலோகூட செய்து விடலாம். மருந்துகளை எடுக்காமல் இருந்தால், உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், பெரும்பாலானோர் எச்ஐவியும் எய்ட்ஸும் ஒன்றுதான் என்று கருதுகின்றனர். ஆனால், எச்ஐவி வேறு; எய்ட்ஸ் வேறு. நோய் எதிப்பு மண்டலத்தின் வலிமையைக் குறைப்பதுதான் எச்ஐவி எனும் வைரஸ். எச்ஐவி தொற்றின் அதீத நிலையாக எய்ட்ஸ் நோயைக் கொள்ளலாம். எச்ஐவி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எய்ட்ஸ் ஏற்படாது. முறையான சிகிச்சை அல்லாதோருக்கும், எச்ஐவியின் அனைத்து சோதனைகளிலும் பாசிட்டிவ் வருபவர்களுக்கு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படுகிறது.

எச்ஐவி தொற்று எவ்வாறு பரவுகிறது?

பெரும்பாலும் பாதுகாப்பற்ற உடலுறவால்தான் எச்ஐவி பரவும் அபாயம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகளைப் பகிர்தல் அல்லது மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்ட ரத்தம் அளிக்கும் நன்கொடையாளர்கள் (மிகவும் அரிது), தொற்று ஏற்பட்ட தாயின் பிரசவம் அல்லது தாய்ப்பால்கூட குழந்தைக்கு தொற்று ஏற்படக் காரணமாக அமையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

தொற்றுக்கான அறிகுறிகள் சில நிலைகளாகக் கொள்ளப்படுகிறது. முதலில் காய்ச்சலில் தொடங்கி, சோர்வு மற்றும் தலைவலி, நிணநீர் கணுக்கள் வீக்கம், தசை வலி மற்றும் மூட்டு வலிகள், தோல் சொறி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல், இரவில் வியர்த்தல்வரை தொற்று கொண்டு செல்லும்.

தடுப்பது எப்படி?

எச்ஐவி தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிமுறைகளாக கூறுப்படுவன, எவருடனும் பாலியல் உறவுக்குப்பின், எச்ஐவி தொற்று பாதித்திருக்குமா என்று அச்சம் தோன்றினால், உறவுகொண்ட 72 மணிநேரத்துக்குள் அதற்கான சிகிச்சை மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தொற்று பாதித்த ஒருவரின் மருத்துவச் சோதனையில் பாசிட்டிவ் என்றிருக்கும்; ஆனால், ரத்தத்தில் கிருமிகள் இல்லை என்று ரத்தச் சோதனை முடிவு கூறும். எச்ஐவி கிருமிகள் நமது செல்களுக்குள் ஒளிந்து கொள்வதுதான் இதன் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாலியல் உறவின்போது, ஆணுறைகளைப் பயன்படுத்துதல், எச்ஐவி மற்றும் பிற பாலியல் நோய்த் தொற்றுகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளுதல், ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல், பாதுகாப்பான பணியிடச் சூழலை அமைத்துக் கொள்வதன் மூலம் எச்ஐவி தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.