தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா? நயினார் நாகேந்திரன்
தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


சேலம் : தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா? மத்திய அரசோடு கலந்து பேசி நல்ல உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வேண்டும் என்றே தீர்மானங்கள் போடப்படுகிறது. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் வராது. பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா. மத்திய அரசோடு கலந்து பேசி நல்ல உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக இருக்கும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், 2026-ல் பாரதிய ஜனதாக் கட்சி, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. அகில இந்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் போட்டால், உடனே இன்னொரு மீம்ஸ் வந்து விடுகிறது. அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைத்தளங்களில் முழுமையாக செயல்பட வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால் திமுக கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கைது செய்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும். நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக் கூடாது. இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். சந்தர்ப்பவாத கூட்டணி திமுக தலைமையில் அமைந்துள்ளது. எங்களது நியாயமான, நேர்மையான ஊழலற்ற கூட்டணி என்பதை சொல்லிக் கொள்கிறோம். தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். பல தியாகங்களால்தான் பாரதிய ஜனதாக் கட்சி வளர்ந்துள்ளது. அந்த தியாகத்திற்கு பெருமை சேர்க்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டு பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். பூத் செம்மைபடுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
எத்தனை தொகுதிகள் எந்த இடம் என்பதை அமித்ஷா, இபிஎஸ் தான் முடிவு செய்வார்கள். என்னுடைய அதிகாரம் என்பது தொண்டர்களை பாதுகாப்பது என்பதுதான். கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலை. எனக்கு மேலே இருக்கிற தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...