மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்தவர்கள், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் பெருமிதம்.

News image
Updated On :22 ஏப்ரல் 2025, 11:12 am

DIN

'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநிலத்தில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். அதேபோல மோனிகா என்ற மாணவி இந்திய அளவில் 39 ஆம் இடம் பெற்றுள்ளார். இருவரும் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நிலையில், 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் உள்ளிட்டோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.