போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்
Updated on
1 min read

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை(ஏப். 21) மறைந்தாா். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், தலைவா்கள் இரங்கல் தெரிவித்தனா்.

மேலும் அவரது மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 3 நாள்களும் தமிழ்நாட்டில் 2 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்பர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

அதன்படி மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகளையொட்டி நாளைய தினம் (ஏப். 25) தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com