

உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
இதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். அதன் விவரம்: தமிழ்நாட்டில் 18 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.
பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 18 மசோதாக்கள் நிறைவேறின. அதில், விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடா்பான மசோதா செவ்வாய்க்கிழமையே தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே நிறைவேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.