
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
"மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் சொல்லியிருக்கிறோமோ அதனை நிறைவேற்றியிருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
அதனால் ஒன்று உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். இன்றைக்குக்கூட பேசும்போது சிலர் சொன்னார்கள். வரும் தேர்தலில் 200 அல்ல, 220 இடங்களைப் பெறுவோம் என்று. அதுல என்ன கஞ்சம்? 234 -ன்னே சொல்லுங்களேன் என்று சொன்னார்கள். அதனால் 234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் நான் போகும் இடமெல்லாம் மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும் 3 முதல் 4 கிமீ தூரம் நடந்தே செல்கிறேன். அப்போது மக்கள் வந்து வரவேற்பு அளிப்பதைப் பார்க்கும்போது மெய்சிலிர்த்து போகிறேன்.
நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி எப்படிப்பட்ட கூட்டணி வைத்து வந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம் என்று பணியாற்றுகிறோம். எனவே எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறையாக இருந்தாலும் சரி சிபிஐயாக இருந்தாலும் சரி எதற்கும் பயப்பட வேண்டாம். ஏனெனில் நாம் நெருக்கடியை பார்த்து வளர்ந்தவர்கள். எனவே 7 ஆவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.