தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா? - நயினார் நாகேந்திரன் பதில்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

News image
நயினார் நாகேந்திரன் (கோப்புப்படம்)- DOTCOM
Updated On :30 ஏப்ரல் 2025, 6:03 am

DIN

பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று பதவியேற்று கொண்டார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலய பஞ்சகங்கா குளத்தில் ஸ்ரீ விஜியேந்திரர் தலைமையில் தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படி மடாதிபதியாக பதவியேற்றார்.

இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுப்பிரமணிய சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,

"இளைய மடாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து தெரியவில்லை. பிரதமர் மற்றும் அமித்ஷா சந்திப்பிற்குப் பின் காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ளேன், தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திக்கிறேன்.

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.

தேர்தல் பணியை திமுக ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.