
அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று(ஆக. 18) இரவு வேலூர் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு தொகுதியில் அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் மக்கள் மத்தியில் பேசினார்.
அணைக்கட்டில் பேச எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்து நின்ற உடன், அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.
அப்போது இபிஎஸ் பேசுகையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளியே இல்லை என்றும் தன்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளில்லா ஆம்புலன்ஸை தொடர்ச்சியாக அனுப்பி, மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை இந்த அரசு செய்கிறது.
இதனால் மக்களுக்கு ஏதாவது ஆனால் யார் பொறுப்பு. நானும் 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன் இதேபோலதான் செய்கிறார்கள்.
இந்த ஆம்புலன்ஸ் எண்ணையும் ஓட்டுநரின் பெயரையும் குறித்து வைத்து, காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் எனக் கூறினார்.
மேலும், இதற்கு எச்சரிக்கை விடுவதாகவும், அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்று ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் எனவும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
இதற்கு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளியை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவே அவ்வழியாகச் சென்றதாக விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.