

டிட்வா புயல் காரணமாக, இன்று(டிச. 2) அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை(ரெட் அலர்ட்) இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் 150 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் சின்னம் வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக விலுவிழக்கும்.
அதன் பிறகு, அடுத்த 12 மணி நேரத்தில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுகுறைய வாய்ப்புள்ளது.
புயல் சின்னம் இன்று சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.