டிட்வா புயல்! சென்னையில் மாலை 4 மணி வரை இடைவிடாது மழை!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் மாலை 4 மணி வரை இடைவிடாது மழை பெய்யும் என அறிவிப்பு
சென்னையில் மழை
சென்னையில் மழைANI
Updated on
1 min read

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று மாலை 4 மணி வரை இடைவிடாத மிதமான மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில், திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட மிக அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூரில் இடைவிடாது மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையிலும் இன்று மாலை வரை மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று லேசான மழை பெய்யும்.

கடலூர், ராமநாதபுரம், நாகை, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Due to Cyclone Titva, Chennai will experience continuous rain till 4 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com