டிட்வா போல ஓயாத புயல்: சிவக்குமார், சித்தராமையா சந்திப்பு 2.0 ஏன்?

டிட்வா போல கர்நாடக பதவி சர்ச்சை ஓயாத நிலையில் சிவக்குமார், சித்தராமையா சந்திப்பு 2.0 இன்று நடந்துள்ளது பற்றி.
முதல்வர் - துணை முதல்வர்
முதல்வர் - துணை முதல்வர்
Updated on
1 min read

புது தில்லி: கர்நாடகத்தில், காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையேயான 2.0 சந்திப்பு, டிட்வா போல புயல் ஓயவில்லை என்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையாவின் அழைப்பின் பேரில், அவரது இல்லத்துக்கு துணை முதல்வர் டிகே சிவக்குமார் சென்று காலை உணவருந்திவிட்டு வந்தார்.

அப்போதே, கட்சியின் தலைமையின் கட்டளைக்கு இருவரும் கட்டுப்படுவோம் என்று ஒருமித்தக் குரலில் கூறியிருந்தார்கள். அப்போதைக்கு புயல் ஓய்ந்ததாகவே இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை மீண்டும் சித்தராமையா, சிவக்குமார் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி நிலை கொண்டிருக்கும் டிட்வா புயல் போல நீடிப்பதையே உறுதி செய்திருக்கிறது.

காங்கிரஸ் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் நிலைத்த வளர்ச்சிக்கான எங்கள் ஒற்றுமையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவே முதல்வரை இன்று எனது இல்லத்தில் காலை உணவிற்கு அழைத்தேன் என்று சிவக்குமார், புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சித்தராமையாவும், சனிக்கிழமை, என் இல்லத்துக்கு வந்த சிவக்குமார் என்னை அவரது இல்லத்துக்கு காலை விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்று கூறியிருந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய போதும், நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், இந்த பிரச்னை வெளியிலிருந்து கிளப்பிவிடப்பட்டது என்றுதான் இரு தலைவர்களும் கூறி வருகிறார்கள்.

சித்தராமையா பேசுகையில், காலை விருந்து சிறப்பாக அமைந்தது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் விரும்புகிறோம். எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலே மிகவும் முக்கியம். 2028 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நோக்கி இருவரும் பயணிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு இல்லை. இப்போதும் இல்லை எப்போதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Shivakumar, Siddaramaiah meeting 2.0 took place today as the controversy over Karnataka's post like Titva continues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com