அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் பதில்

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை-நயினார் நாகேந்திரன்.
அண்ணாமலை-நயினார் நாகேந்திரன்.
Updated on
1 min read

சேராத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே கிடைக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்தை சந்தித்த பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

நயினார் நாகேந்திரன் கூறியதாவது, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போது அதிமுகவில் நிலவும் உள்கட்சி பூசல், வெறும் கண்துடைப்புதான்.

தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனனிடம் சென்றது போல, சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்விதான் கிடைக்கும்.

இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்? என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார் என்று பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்.

என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தை தூண்டக் கூடிய கதாநாயகனே சு.வெங்கடேசன்தான். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றார்.

Summary

Nayinar Nagendran has responded to the question of whether Annamalai is starting a separate party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com