

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடருவார் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், புது தில்லியில் டிச. 4-இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாமக தலைவர் விவகாரத்தில், மருத்துவர் ஆர். அன்புமணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மோசடி ஆவணங்களின் அடிப்படையில், பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை சட்டமீறல் நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டிருப்பதையும், இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி(பாமக) கண்டனம் தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கையானது, எமது தலைமையின் கீழ் செயல்படும் இக்கட்சிக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
இதையடுத்து, எமது கட்சியின் மூத்த தலைவர்கள் ஜி. கே. மணி, ஸ்ரீகாந்தி ராமதாஸ், பி. டி. அருள்மொழி, அருள் ராமதாஸ், எம். துரை மற்றும் பிற மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை பதிவு செய்வார்கள். இந்த நிலையில், டிச. 4-இல் தில்லி ஜந்தர் மந்தரில் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.