

சென்னைக்கு அருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கிய நிலையில், நேற்று காலை (டிச. 1) முதல் சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னைக்கு அருகே நிலவி வந்த இந்தப் புயல் சின்னம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்தப் புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, இன்றிரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனால், இன்று முழுவதும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.