ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விலையில்லா மடிக்கணினி திட்டம்: டிச.19ல் முதல்வர் தொடக்கிவைக்கிறார்!

விலையில்லா மடிக்கணினி திட்டத்தை முதல்வர் தொடக்கிவைக்கவுள்ளது பற்றி...

News image
கோப்புப்படம்- DIPR
Updated On :6 டிசம்பர் 2025, 7:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை  டிச. 19 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.

தமிழக மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் முதல்கட்டமாக 2025- 26 ஆம் ஆண்டு 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.

இதற்கான டெண்டர் கோரப்பட்டு மடிக்கணினி கொள்முதலுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து திமுக ஆட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை  டிச. 19 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற டிச. 19 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

MK stalin inaugurated free laptop scheme for college students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.