மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

மதுரையில் நடைபெற்றுவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்.
Updated on
1 min read

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளா்கிறது’ என்ற தலைப்பில் இன்று (டிச. 7) நடைபெற்றுவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரூ. 36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் வாயிலாக 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150.28 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை இன்று காலை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விரகனூர் சுற்றுச்சாலை அருகே வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டா் அரங்கில், தமிழ்நாடு வளா்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன்பிறகு, உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில், மேலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

Summary

91 MoUs were signed at the Investors Conference held in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com