காவேரி மருத்துவமனையில் காது உட்செவி அறுவைச் சிகிச்சை!

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் காது அறுவைச் சிகிச்சை...
Cauvery Hospital
சிறுமிக்கு உட்செவி உட்பொருத்தல் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவினர்.
Updated on
1 min read

சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 3 சிக்கலான காது உட்செவி அறுவைச் சிகிச்சைகளை மருத்துவக் குழு வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

காவேரி மருத்துவமனை உட்செவி உட்பொருத்தல்  (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளனர் இந்த மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்.

இதில் இரு குழந்தைகள் அடங்குவர். ஒரு சிறுவன் டவுன் சிண்ட்ரோம் எனும் ஜீன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இன்னொரு குழந்தை, தண்டுவட வளைவும் மொண்டினி உருமாற்றம்(Mondini Dysplasia) எனும் மிகவும் அரிய பிறவி உட்செவி குறைப்பாட்டுடன் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஆவார்.

மேலும் சிக்கலான காது நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணி என மூவருக்கும் உட்செவி உட்பொருத்தல் அறுவைச் சிகிச்சைகளை காது, மூக்கு, தொண்டை (ENT) துறையின் தலைவரான மருத்துவர் ஆனந்த் ராஜு தலைமையில் மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

இதுவரை காவேரி மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cochlear Implant by Cauvery Hospital Radial Road

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com