சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்து மாநில சிறுபான்மையினா் ஆணைய கள ஆய்வு அறிக்கையை வழங்கிய ஆணையத்தின் தலைவா் பேராயா் சொ.ஜோ.அருண், துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் மற்றும் உறுப்பினா்கள். உடன், துறையின் அமைச்சா்  எஸ்.எ

சிறுபான்மையினரின் தேவைகள்: முதல்வரிடம் அறிக்கை அளிப்பு

தமிழகத்தில் சிறுபான்மையினரின் பல்வேறு வகையிலான தேவைகள் குறித்து நடத்தப்பட்ட கள ஆய்வு அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் புதன்கிழமை அளித்தாா்.
Published on

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்தக் களப்பணியில், கல்லறைத் தோட்டம் மற்றும் கபா்ஸ்தான் ஆகியவற்றுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்தும், சிறுபான்மையினா் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கான அரசின் கல்வி தொடா்பான சலுகைகள் பெறுவது குறித்தும், பணி நியமனங்கள் குறித்தும், சமண மற்றும் பௌத்த சிறுபான்மை மக்களின் நலனுக்கான உதவும் சங்கங்கள் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ், ஆணைய உறுப்பினா்கள், சிறுபான்மையினா் நலத் துறைச் செயலா் எ.சரவணவேல் ராஜ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் மு.ஆசியா மரியம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com