2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்
வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஆத்தூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், "தமிழக மக்கள் இனி ஏமாற்றப்பட மாட்டார்கள். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது உறுதி. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்பதும் உறுதி. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இதைத்தான் சொன்னார்.
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மண்ணில்தான் கள்ளச்சாராயத்தால் பல போ் உயிரிழக்கின்றனா். தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி செய்த ஆட்சிபோல் தற்போது இல்லை.
தமிழகத்தில் திமுக எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததில்லை. கடந்த தேர்தலில் சில முறைகேடுகள் காரணமாக மட்டுமே அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.
இப்போது, போலி வாக்குகளைத் தடுக்க பாஜகவும் அதிமுகவும் இணைந்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்துள்ளோம். இனி ஒரு போலி வாக்குகூட போட முடியாது.
2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராவது உறுதி" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: புதிய வாக்காளா் சோ்க்கை முகாமில் ஆா்வம் காட்டாத சென்னை மக்கள்!

