தமிழ்நாடு
கிறிஸ்துமஸ் அன்று ஒரு ஷிப்டாக முன்பதிவு மைய செயல்படும்
கிறிஸ்துமஸ் தினமான வரும் டிச. 25- ஆம் தேதி சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒரு ஷிப்டில் மட்டும் ரயில் பயண டிக்கெட் முன்பதிவு
சென்னை: கிறிஸ்துமஸ் தினமான வரும் டிச. 25- ஆம் தேதி சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒரு ஷிப்டில் மட்டும் ரயில் பயண டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் வியாழக்கிழமை (டிச. 25) கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை தினம் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளுக்கு கணினி வழி முன்பதிவு மையங்கள் மட்டும் செயல்படும். அவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு ஷிப்டில் மட்டும் இயங்கும் என்பதால், பயணிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
