ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி

ஈசிஆர் விவகாரம் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேட்டி...
 திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி(கோப்புப்படம்)
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எந்த ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றாலும் அதைத் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தொடர்புபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயன்றுவருகிறார்.

இது இன்று வெட்டவெளிச்சமாக வெளியே வந்துவிட்டது. ஆனால், அவர் குற்றம் சாட்டிய பல விசயங்களில் அதிமுகவினரே தொடர்புகொண்டுள்ளனர்.

ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை சிலர் வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சார்ந்தவர். கைது செய்யபட்டவர் பயணித்த கார் நிலகிரி மாவட்ட அதிமுக செயலாளருடைய சகோதரர் மகனுக்குச் சொந்தமானது.

அண்ணாநகர் சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவைச் சார்ந்த வட்டசெயலாளர். திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிமுகவைச் சார்ந்தவர்.

இப்படி இன்னும் எத்தனையோ குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எல்லாம் அதிமுகவினரே. ஆனால் அதை எல்லாம் மறைத்து, மக்களை திசை திருப்பும் நோக்கில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு பரப்பி வருகிறார் பழனிசாமி. அதிமுகவினர் செய்யும் தவறுகள் அனைத்தையும் திமுகவினர் மீது பழிபோட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் போற்றும் நல்லாட்சி நடைபெற்று வருகின்றது.

இதன் காரணமாக திமுக எல்லா தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. மக்களிடம் திமுக அரசு பெற்றுள்ள நற்பெயரைக் குலைப்பதற்கு, திட்டமிட்ட வகையில் அதிமுக முயற்சி செய்து வருகின்றது என்பதையே ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரம் காட்டுகின்றது.

ஆகவே, இந்த விவகாரத்தில் முழுமையான புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு, குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.