சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!

காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :3 பிப்ரவரி 2025, 7:57 am

DIN

காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 பேரை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

9 மீனவர்களில் இரு சிறுவர்களை எச்சரித்தும் 7 பேரை நிபந்தனைகளுடனும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் படகு ஓட்டுநருக்கு மட்டும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 40 லட்சம்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.