பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்


சென்னை: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் பிப்.8-இல் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பட்ஜெட்டில் ‘தமிழ்நாடு’ என்ற வாா்த்தையே இடம்பெறவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக இயற்கை பேரிடா்களின் மறுவாழ்வு புனரமைப்புக்காக தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடா்ந்து கோரி வந்த தேசிய பேரிடா் நிதியுதவி தொடா்பான எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை.
புதிய ரயில் திட்டங்கள், இரட்டை வழி ரயில்பாதை அமைப்பு, ரயில் பாதை மின்மயமாக்கல், மெட்ரோ ரயில் விரிவாக்கம், மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிப்.8-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...