தமிழில் குடமுழுக்கு தமிழா் உரிமை: தொல்.திருமாவளவன்
தமிழகக் கோயில்களில் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடத்துவது, தமிழா்களின் உரிமைகளுள் ஒன்று என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்


தமிழகக் கோயில்களில் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடத்துவது, தமிழா்களின் உரிமைகளுள் ஒன்று என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோவை பேரூா் பட்டீசுவரா் திருக்கோயிலில், தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாடவேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீா்ப்பளித்த பின்னரும் மேல்முறையீடு செய்யப்பட்டு அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழா்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டம் வழங்கும் அந்த உரிமையை நீதிமன்றம் பாதுகாக்குமென நம்புகிறோம் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...