எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

பிப். 25-ல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

News image
அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Updated On :21 பிப்ரவரி 2025, 7:54 am

DIN

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாணவரணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளான ‘இளைஞர் எழுச்சி நாளை’ தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக கழக மாணவர் அணியினர் எழுச்சியுடன் கொண்டாடுவோம்.

2. தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை சிதைக்கும் விதமாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைதுவிதமான போராட்டம் நடத்த முடிவு.

3. மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம்.

4. தமிழ்நாட்டின் "இரும்பின் தொன்மை" வரலாற்றை உலகிற்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.

5. மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்புகோரி, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம் நடத்த முடிவு.

"தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என பா.ஜ.க.வின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய பா.ஜ.க. அரசு, தன்னால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லையே என்ற வெறுப்புணர்வோடு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  

கல்விதான் தமிழ்நாட்டின் இந்த உயரிய நிலைக்கு காரணம் என்பதை அறிந்து, அதனை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுத்து, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாடு அரசிற்கு நிதி வழங்குவோம்” என பா.ஜ.க.வின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிடுவது, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத்தையா? அல்லது மனுதர்ம சட்டத்தையா?  என்ற கேள்வி எழுகிறது. கூட்டாட்சி தத்துவத்தையும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையையும் சிதைக்கும் வகையில், சட்டத்திற்கு புறம்பாக மத்திய கல்வி அமைச்சர் பேசியதற்கு தி.மு.க. மாணவர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், அவர் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், கல்வித்துறைக்கான நிதியை விடுவிக்கும் வரையில் கழக மாணவர் அணி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அதனைத்தொடர்ந்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, வரும் பிப். 25 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.