மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள்
Updated On :22 பிப்ரவரி 2025, 5:49 am

DIN

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் அவர் பெயரின் கீழ் 'சமூக செயற்பாட்டாளர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி பொறுப்பு இல்லாமல் அழைப்பிதழில் தன் பெயரைக் குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து காளியம்மாளிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.