
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் இன்று (பிப். 25) சந்தித்துப் பேசினார்.
தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் முன்வைக்கவுள்ள கருத்துகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா நாளை நடைபெறவுள்ளது.
இதில், தவெக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் மேடையிலே அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதற்கான பணிகளை கட்சியின் தலைமைக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இதில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்தித்துள்ளார். இதில் நாளை பேசவுள்ள முக்கிய கருத்துகள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ஹிந்தி அல்ல; 3வது மொழியாக எதுவேண்டுமானாலும் இருக்கலாம்: அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.