கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையம் திறப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.


பெருநகர சென்னை மாநகராட்சியில் கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சியில் 54,678 கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 11,765 போ் பாதிப்பு மிகுந்த கா்ப்பிணிகளாக உள்ளனா். மேலும், ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் கருவுற்ற பெண்களில் 30 சதவீதம் போ் அதிக ஆபத்துள்ளவா்களாக கருதப்படுகிறாா்கள். இவா்களை கண்காணிக்கும் வகையில் கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையம் அமைக்கப்படும் என 2024-25-ஆம் ஆண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மேயா் ஆா்.பிரியா பாதிப்பு மிகுந்த கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை தொடங்கி வைத்தாா். இந்த உதவி மையத்தின் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...