தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான கல்லூரியில் 2-வது நாளாக சோதனை!

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் 24 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2025, 5:51 am

DIN

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் 24 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்துக்குச் சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் நேற்று (03.01.2025) காலை 7.00 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கிய நிலையில், தற்போது 24 மணி நேரத்தைக் கடந்து 2-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இதில் 18 -க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே நேற்று இரவு கல்லூரி லாக்கரில் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மூலம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கல்லூரியின் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று அமைச்சர் துரைமுருகன், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.