ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

மருத்துவமனையில் கங்கை அமரன் - IANS

Updated On :5 ஜனவரி 2025, 10:00 pm IST

இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை அருகே படப்பிடிப்பின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், தமிழ் திரைத் துறையில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் நன்று அறியப்படுபவர்.

தமிழில் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் 1979-ஆம் ஆண்டு இசைமையப்பாளராக திரைத் துறையில் அடியெடுத்துவைத்தார் கங்கை அமரன். பின்னர் கோழிக் கூவுது படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களுக்கு பாடல்களை எழுதிய அவர், பாடல்களையும் பாடியுள்ளார்.

தற்போது 77 வயதாகும் கங்கை அமரன், புதிய படத்தில் நடித்து வருகிறார். சிவகங்கை சிற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.