சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல்

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டக் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு விவசாயியிடமிருந்து 20 கரும்புகள் கொண்ட 50 கட்டுகள் மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்!

கூட்டுறவுத் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், விவசாயிகள் உற்பத்தி செய்த அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்தி , திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகிலுள்ள பிடாகம் பகுதியில் திங்கள்கிழமை காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தா தலைமையில், தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிட செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com