47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீமான் கருத்து - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
சீமான்(கோப்புப்படம்)
Updated On :10 ஜனவரி 2025, 12:47 pm

DIN

சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது.

எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதைக் கண்டித்து திராவிடா் இயக்கம், பெரியாரிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே இந்த விவகாரத்தில் சீமானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.