
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 65 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இறுதி நாளான இன்று மனுத் தாக்கல் செய்தனர். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக சட்கிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
இதனால் இடைத்தேர்தலில் திமுக, நாதக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 18- ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. 20- ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் கடந்த 10- ஆம் தேதி தொடங்கிய நிலையில் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.