ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி உட்பட 55 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அதேசமயம் அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக சட்கிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால் இடைத்தேர்தலில் திமுக, நாதக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் கடந்த 10- ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். தொடா்ந்து சனிக்கிழமை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.
20- ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
திருவாரூா் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்பு
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
அரியலூரில் 22, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


