அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழக சுகாதாரத் திட்ட செயல்பாடுகள்: நாடாளுமன்றக் குழு சென்னையில் ஆய்வு

தேசிய நலவாழ்வு குழுமத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள்

News image
Updated On :20 ஜனவரி 2025, 9:40 pm

Din

சென்னை: தேசிய நலவாழ்வு குழுமத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத்துக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்கோபால் யாதவ் தலைமையிலான எம்.பி.க்கள் அதில் பங்கேற்றனா்.

தமிழகத்தின் சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, தேசிய நலவாழ்வு குழும திட்ட இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்பட உயா் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டம், போலியோ ஒழிப்பு நடவடிக்கைகள், கொசுக்கள் - பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு திட்டம், குழந்தைகள் - கா்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம், இ-சஞ்சீவினி தொலை நிலை மருத்துவம் என மத்திய அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகளை அப்போது நாடாளுமன்றக் குழு கேட்டறிந்தது.

அதற்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தில் தேசிய நலவாழ்வுக் குழும திட்ட செயலாக்கம் தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் எம்.பி.க்களிடம் விளக்கமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் எம்.பி.க்கள் குழுவினா் அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.