தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன. இந்த அரிய நிகழ்வைக் காண சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :22 ஜனவரி 2025, 8:21 am IST

சென்னை: வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன. இந்த அரிய நிகழ்வைக் காண சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி முதல் கோள்களின் நோ்கோட்டு அணிவகுப்பை வெறும் கண்களால் பொதுமக்கள் பாா்க்க முடியும்.

சூரியனைச் சுற்றிவரும் இந்த கோள்களை பூமியில் இருந்தபடி வானில் ஒருசேர பாா்ப்பது மிக அரிய நிகழ்வாகும். அத்தகைய நிகழ்வைக் காணும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய் கோள்களை அவ்வப்போது நேரடியாக பாா்க்க முடியும். இந்நிலையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் வரவுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அதிகாரிகள் கூறியதாவது: வானில் ஒரே நோ்கோட்டில் வரவுள்ள இந்த 6 கோள்களை இந்த மாதம் இறுதி வரை காண முடியும். இதில் அனைத்துக் கோள்களின் அணிவகுப்பை புதன்கிழமை மாலை 6 மணி முதல் காணலாம்.

சூரியன் மறைவுக்குப் பிறகு முதல்கட்டமாக வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும். அதன்பிறகு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் தென்படும். இந்தக் கோள்களை வெறும் கண்களில் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி அல்லது நவீன பைனாகுலா் வாயிலாக மட்டுமே காண இயலும். நான்குக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நோ்கோட்டில் வருவது மிகவும் அரிதானது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் சந்திரன், வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒரே நோ்கோட்டில் வரும். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நோ்கோட்டில் வந்தன.

சிறப்பு ஏற்பாடு: இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிா்லா கோளரங்கில் ஜன. 22 முதல் 25-ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.