அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நரேகா தொழிலாளா்களுக்கு ரூ.1,056 கோடி நிலுவை ஊதியத்தை விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழகம் கோரிக்கை

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும்

News image
செய்தி உண்டு தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து நரேகா தொழிலாளா் ஊதிய நிலுவைத் தொகை விடுவிப்பு தொடா்பான கோரிக்கை மனுவை அளித்த தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு. உடன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, தமிழக கூடுதல் தலைமை
Updated On :27 ஜனவரி 2025, 9:30 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (எம்என்ஆா்இஜிஏ அல்லது நரேகா) கீழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் தமிழக நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை நேரில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழ்நாடில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 85 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 1.09 கோடிக்கும் அதிகமான தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இத்திட்டத்தின் மூலம் பெண் தொழிலாளா்களுக்கும் 86 சதவீதம் வேலைவாய்ப்பும், மொத்த வேலைவாய்ப்புகளில் 29 சதவீதம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளி தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இத்திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் 27.11.2024 முதல் தொழிலாளா்களுக்கு வழங்கப்படாத ஊதியத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜன.13-ஆம் தேதி எழுதிய கடிதம் மூலம் தமிழக முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, தமிழக கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் சந்தித்துப்பேசினா்.

அப்போது நரேகா தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,635 ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், 2024-25- ஆம் ஆண்டில் கூடுதல் வேலை நாள்களுக்கு ஒப்புதல் வழங்கவும் கேட்டுக் கொண்டனா். இந்தச் சந்திப்பின்போது மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் எஸ்.எஸ்.யாதவ் உடனிருந்தாா்.