ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வேட்பு மனு விவகாரம்: இபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழக அரசு, மனுதாரா் பி.மிலானி ஆகியோா் 4 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :27 ஜனவரி 2025, 9:23 pm

Din

நமது நிருபா்

புது தில்லி: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் எதிா்மனுதாரா் பதில் அளிக்க உத்தரவிட்டது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற போது, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றாா். இந்த நிலையில், அவா் அத்தோ்தலில் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக

அளித்திருந்ததாகவும், அவா் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பி.மிலானி என்பவா் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், இந்த புகாா் குறித்து விசாரணை நடத்தவும், முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை கோரி எடப்பாடி பழனிசாமி சாா்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடா்பாக தமிழக அரசு, மனுதாரா் பி.மிலானி ஆகியோா் 4 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், சேலம் நகர மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் இது தொடா்பாக 2023, மே 4-ஆம் தேதி பதிவு செய்த வழக்கின் மேல் விசாரணையைத் தொடா்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனா்.