
திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் பலியாகினார்.
இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் விடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்து வெளியிட்டார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது.
நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரைத் தாக்கியது குறித்து வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கின் பிரதான சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார்.
இவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க தென்மண்டல ஐஜியின் உத்தரவின்பேரின் 2 காவலர்கள் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.