தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது.
tvk
தவெக தலைவர் விஜய்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் இரண்டு கோடி இல்லங்களில், இரண்டு கோடி கட்சி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

இது குறித்துச் சென்னை, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், வருகிற 08.07.2025 அன்று காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சித் தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாவட்ட செயலாளர்கள் தங்களுடன், கட்சியின் மற்ற நிர்வாகிகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று கட்சித் தலைவர் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் குற்றத் தலைநகராக பிகார்: ராகுல் காந்தி

Summary

The advisory meeting for the training workshop for TVK's membership recruitment work will be held in Panayur on July 8th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com