
கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மன்னிக்கவே முடியாத அலட்சியம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி என மூவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 3 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன்,
"கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. மன்னிக்கவே முடியாத அலட்சியத்தால் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பலரும் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.